Friday, January 27, 2023

சமாதிநிலை என்றால் என்ன?

 

சித்தர்கள் சமாதிநிலை அடைவது என்பது இறந்து போவது இல்லை. அணுவாயும் அகண்டமாயும் ஆகத் தெரிந்தவர்களே சித்தர்கள், ஒன்றுமில்லாத ஒன்றிலிருந்தே அணுஅணுவாக உற்பத்தியாகி பஞ்ச பூதங்களால் ஆன இந்த உடல் உயிர் வந்துள்ளது. அதில் நான் என நின்றதை அறிந்து தான் அதுவாக ஆனவர்களே சித்தர்கள். இச்சித்தர்கள் அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராத்தி, பிரகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்ற அட்டமா சித்திகளையும் பெற்றவர்கள், அணிமா என்பது அணுவிலும் அணுவாக ஆவது. மகிமா என்பது விஸ்வரூபமாகத் தோன்றுவது கரிமா என்பது மலையைப் போல் உறுதியாக நின்று கனப்பது. இலகிமா என்பது தக்கையைப்போல் இலேசாகி மிதப்பது. பிராத்தி என்பது பரகாய பிரவேசம் என்ற வான்வெளியில் உடலோடு பறப்பது. பிரகாமியம் என்பது எந்த உடம்பிலும் புகுந்து எழுந்து மீண்டு வருவது ஈசத்துவம் என்பது ஈசன் செய்யும் ஆக்கல், அளித்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களையும் ஆற்றுவது. வசித்துவம் என்பது சூரிய சந்திரன் முதல் உலகில் உள்ள அனைத்தையும் தன் வசப்படுத்துவது.


Source: ஶ்ரீ பாம்பாட்டிச் சித்தர் தேடலும் பாடலும் - சுவாமி. பிரசோப்ஜி, கொல்லூர். மூகாம்பிகை கோயில்.